Moon shop

Moon shop
---------------
அப்பா எனக்கு நைட் டார்க் பிடிக்கலபா
சன் லைட் வேணும்
ஏண்டா நைட் அழகா தானே இருக்கு
இல்லப்பா டார்க்ல எல்லாம் காணாம போயிடுது
பாருங்க வெளில எதுவுமே தெரியல
டார்க் எனக்கு பயமா இருக்குப்பா
சரி சன் வந்துடும்டா
அது இப்ப வராதுபா சாய்ந்திரமா அது கடலுக்குள்ள போய் தூங்கிடுது
சன்ன சுத்தி எப்பவும் வெளிச்சம் இருக்கும்டா அது தூங்காது
இல்லப்பா கடலுக்குள்ள இருட்டா இருக்கும் அண்ண சொன்னா
அதனால தான் அது அங்க போய் தூக்குங்குது
சரி காலையில பிரெஷா எழுந்து வந்துடும்டா
இல்லபா நம்மளே ஒரு சன் வாங்கிக்கிலாம்பா
என்னது ....
நம்மகிட்ட சன் இருந்தா இருட்டு வரும்போது ஆன் பண்ணிக்கிலாம்பா
சரி அமேசான்ல ஆடர் போட்டு வாங்கிக்கலாம்
அமேஷான்ல கிடைக்காதுபா Moon shopல தான் கிடைக்கும்
Moon shopலையா
ஆமா தெனமும் மூன் வந்து வானம் புள்ளா சன்னை அடிக்கிவச்சி விக்கிதுபா
அட அது சன் இல்லடா ஸ்டார்ஸ்
இல்லப்பா எல்லா ஸ்டர்ஸும் சன் தானாபா அண்ண சொன்னா
சரிப்பா வாங்கிக்கிலாம்
அப்பா எனக்கு க்யூட்டா அழகா ஒரு சன் வாங்கிக்குடுப்பா
நா அத பெட்டா வச்சிக்கிறேன்
சரிப்பா ..