மாபெரும் அன்பு

Posted on August 14, 2023 by சே சிவக்குமார்
...

விதியின் நூறு கைகள் அந்த மாமலையின் முன்னால் என்னை கொண்டுவந்து நிறுத்தியது....
மலையின் உச்சியை தான் முதலில் பார்த்தேன்  
வெண்பனி அதன் முடியிலிருந்து வழிந்து இடையில் உறைந்து நின்றது  
காத்து நிற்பவளின் சோகம் போல 
உறைந்த இடத்திலிருந்து ஓடை ஒன்று துவங்குகிறது அவள் சிரிப்பை போல 
மலை முழுக்க மரங்கள், பசுமையில் திளைக்கிறது மாமலை 
மேகம் உரசி சிலிர்க்கிறது சில நேரங்களில் 
நான் கொஞ்ச நேரம் மலையையே பார்த்துக்கொண்டு இருந்தேன் 
மாபெரும் உயிர் குவை. 
முதலில் சில  புகைப்படங்களை எடுத்தேன்.
பின் சின்ன சின்ன  கற்களை எடுத்து அதனை நோக்கி வீசினேன்  
கைகளை வீசி பறப்பதுபோல் அதனை நோக்கி ஓடினேன் 
கூக்குரலிட்டு எதிரொலிக்காக காத்திருந்தேன் 
கை கால் ஓய்ந்து அதனையே பார்த்துக்கொண்டு அமர்ந்தேன் 
கன்னக்குழியென ஒரு அருவியை  தூரத்தில் பார்த்தேன் ....
எனக்கு கண்ணீர் வழியத்துவங்கியது.. 
தொண்டையில் துக்கத்தின் கனம் அழுத்தியது 
உணர்வுகளின் எடைத்தாளாமல் உடல் நடுங்கியது 
ஓ வென்று கதறி அழுதேன் 
மண்ணில் படுத்துக்கொண்டு உடல் குறுகி அழுதுக்கொண்டே இருந்தேன் 
என் தெய்வமே என் தெய்வமே
மாபெரும் அன்பின் முன்னாள் 
இந்த எளிய மனதை கொண்டுவந்து நிறுத்தினால் 
நான் என செய்ய முடியும் கதறி அழுவதைவிட